‎ ‎ தகவல் துளிகள்: கைத்தொலைபேசியால் ஆபத்தா ?

Monday, April 25, 2011

கைத்தொலைபேசியால் ஆபத்தா ?

நீண்ட கால இடைவெளிக்குப் பின் இப்பதிவு மூலம் அனைவரையும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. திடிரென்று தாயகம் செல்ல வேண்டியிருந்த காரணத்தினாலும் பாரிய வேலைப்பளு காரணமாகவும் தொடர்ந்து பதிவெழுத முடியாமல் போய்விட்டது அனால் என்னைத் தேடி பதிவெழுதிய அன்புச் சகோதரன் மதியோடை மதி. சுதா அவர்களுக்கும் மற்றும்  பதிவுலக நண்பர்கள் வாசக பெருமக்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

இது ஒரு உண்மைச் சம்பவம்: 

வழமை போல நேற்று காலை எனது அலுவலக கணனியில் மின்னஞ்சலை திறந்ததும் அவிசரத் தகவல் என்று தலைப்பிட்டு  சவுதியில் உள்ள ஒரு மனேஜச்சரிடமிருந்து  மெயில் வந்திருந்தது சம்பவத்தை பார்த்ததும் எல்லோரும் அதிர்ந்து போனோம். கைத்தொலைபேசி வெடித்து ஒருவரின் கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.  

சவுதியரேபியாவின்  ரியாத் நகரில் உள்ள தனது வீட்டில் ஒருவர் படுக்கையறையில் கைத்தொலைபேசியை சார்ச்சில் இட்டுவிட்டு  உறங்கியிருகின்றார் அதே நேரம் பிறரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது அழைப்பு ஏற்ப்பு பொத்தானை அழுத்தியதும் உடனே பாரிய சத்தத்துடன் கைத் தொலைபேசி வெடித்துருக்கின்றது.  உடனே உறவினர் அவரது அறைக்கு ஓடிச் சென்று பார்க்கையில் அவர் உணர்வற்ற நிலையில் கையில்  எரி காயங்களுடன் தரையில்  காணப்பட்டார். மறுகணமே அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று தீவீர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு நினைவு வந்திருக்கிறது.


இந்த படங்களை பாருங்கள்:-



சம்பவத்தை விசாரித்த சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில் கைத்தொலைபேசி சார்ச்சில் உள்ளபோது தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துவதோ அல்லது வரும் அழைப்புகளை ஏற்பதோ மிகப்பெரிய ஆபத்து எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சார்ச்சர்  பிளாக்கை மின்சார இணைப்பிலிருந்து  முற்றாக துண்டித்துவிட்டு அழைப்புகளை மேற்கொள்ளுவதுதான் மிகச்சிறந்த பாதுப்பு எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இத் தகவல் எல்லோரையும் சென்றடைய கீழே Email This என்பதை கிளிக் பண்ணி லிங்கை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள். உங்களாலும் ஓர் உயிர் காப்பாற்றப்படலாம் அல்லவா?. (படங்களை தந்துதவிய அரபு மொழித் தளத்திற்க்கு நன்றி http://www.vb.eqla3.com/om)

Whether or not they have a cell phone. They can also inform others who do......

11 comments:

  1. இந்த பதிவு படித்ததும் செல்போனை
    பார்த்தாலே பயம்மா இருக்கு. கவனமுடன் கiையாள வேண்டும்
    என்ற விழிப்புணர்வு வந்தhிருக்கு. நன்றி.

    ReplyDelete
  2. என்ன நண்பரே நலமா?

    //நீண்ட கால இடைவெளிக்குப் பின்//

    ஆமாம் நீண்டடடடட..டட கால இடைவேளி

    மறுபடியும் பதிவு எழுத வந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  3. எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ......
    பெரிய இடைவெளி...

    வந்தவுடன் அருமையான பதிவு. கண்டிப்பாக இமெயில் செய்கிறேன்.

    ReplyDelete
  4. @Lakshmi said...
    தங்கள் கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. @ ஹைதர் அலி said.

    நலம் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  6. @ பலே பிரபு said...
    கருத்துக்கு நன்றி சகோதரம்

    ReplyDelete
  7. விழிப்புணர்வு கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. @இராஜராஜேஸ்வரி said...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete
  9. என்ன அண்ணாச்சி இது கொடுமை... இப்படியெல்லாம் நடக்குமா ? உண'மையில் நானும் இப்படித் தான் இனிமேல் திருத்திக்கிறேன்...

    ReplyDelete
  10. எங்கள் உறவ வலையுலகம் கடந்த உறவு அண்ணாச்சி..

    ReplyDelete
  11. ♔ம.தி.சுதா♔ said
    நன்றி தம்பி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...