‎ ‎ தகவல் துளிகள்: மனிதன் அழிந்த பிறகு?

Sunday, May 1, 2011

மனிதன் அழிந்த பிறகு?

பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன் விலங்கினங்கள் தோன்றி வாழ்ந்து வந்தன.இது தெரிந்ததுதான்.

"ஆனால் பிரளயம் இயற்கைச் சீற்றம் என்று ஏதாவது காரணத்தினால் இந்த உலகம் அழிந்தாலும் கூட சில விலங்குகள் மிச்சமிருக்கும்"என்கிறார்கள் விஞ்ஞானிகள்! பூமியின் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதில் மனித இனம் இருக்கப் போவது மிகக் குறுகிய காலம்தானாம்.

"அடடா... நம் கதை முடிஞ்சுபோச்சா?"என்று பயப்படத் தேவையில்லை.இன்னும் சில கோடி வருடங்களுக்கு பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.அதனால் நாமும் சௌக்கியமாக இருக்கலாம்.



"சுமார் ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகுதான் பூமியில் மனிதன் இருக்கமாட்டான்.ஆனால் விசித்திரமான புது வகையான மிருகங்கள் நிச்சயமாக உலாவிக்கொண்டிருக்கும் என்கிறார் பூமி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் சைமன். அந்த விசித்திர மிருகங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இவர் தலைமையிலான ஆய்வு கற்பனை செய்து வைத்திருக்கிறது.அந்தக் கற்பனை உருவங்களைப் பார்த்தால் முதலில் சிரிப்பு வரும்.பின்னர் அலறுவீர்கள்!

ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்குமாம்.நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்குமாம்.பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாம்.மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லையாம்...மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம்வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்குமாம்.ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவுமாம்.மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்குமாம்.அது போன்ற விலங்குகளுக்கு"நைட் ஸ்டார்க்கர்" என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர்.

"அந்த விலங்குகள் உள்ள பூமியில் மனிதனால் சில நிமிடம்கூட உயிருடன் உலவ முடியாது.ஒருவேளை மனிதன் வேற்றுக் கிரகத்தில் குடியேறி அங்கிருந்து பூமிக்கு செயற்கைக் கோள் அனுப்பினால் இந்த விலங்குகளின் அட்டகாசத்தை அவன் வானில் இருந்தபடி பார்த்து மிரளலாம்!"என்று சிரிக்கிறார் சைமன்.

யாருக்குங்க தெரியும்...கற்பனை என்றாலும் ஆராய்ச்சியாயிற்றே!!!

Thanks: Science magazine & Danuma

9 comments:

  1. என்ன பாஸ்..இன்னமும் இணைக்கவில்லையா திரட்டிகளில்??

    ReplyDelete
  2. //ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்குமாம்.நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்குமாம்.பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாம்.மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லையாம்...மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம்வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்குமாம்.ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவுமாம்.மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்குமாம்.அது போன்ற விலங்குகளுக்கு"நைட் ஸ்டார்க்கர்" என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர். ..//
    ஏன் ஐயா மிரட்டுறீங்க??
    வாசிக்க நல்லாத்தான் இருக்குது..
    நினைச்சா தான்...

    ReplyDelete
  3. உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள விலங்குகள்,ஊர்வன,பறப்பன அத்தனையையும் மனிதன் விட்டு வைத்திருப்பான் என்றா கருதுகிறீர்கள்.5 கோடி ஆண்டுகளுக்கு பின்பு மனிதன் இருக்க மாட்டான் என்பது உண்மையானால், விலங்குகள் 5 லட்சம் ஆண்டுகளுக்கு பின்பு இருக்காது என்பதும் உண்மையே.மனிதன் தனக்கு வசதியான [அப்பப்பா இந்த பூமியில் என்னா வெயில்]வேறு கிரகத்தை தேர்ந்தெடுத்து குடி பெயர்ந்தாலும்,பொழுது போக்கிற்காகவும் வேட்டை யாடுவதர்க்க்காகவும் பூமிக்கு வந்து போவான் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  4. ஆச்சரியமான தகவல் பாஸ் !!!!!

    ReplyDelete
  5. @மைந்தன் சிவா said..

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. @ பொ.முருகன் said..

    ஆமாம் இருக்கலாம்
    தங்கள் கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. @nekalvukal said...
    ஆச்சரியமான தகவல் பாஸ் !!

    வாங்க,,
    தங்கள் கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. விடுங்க இனிமேலாவது அதுங்க வாழ்ந்துட்டு போகட்டும்.

    ReplyDelete
  9. ஃஃஃஃமுயல்கள் ஆறடி உயரம் இருக்குமாம்.நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்குமாம்.பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாம்.ஃஃஃஃ

    அப்படியா அந்தக்காலத்தில் நாங்கள் தான் பிறப்பெடுத்திருப்போமோ தெரியல...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...