நம்பிக்கையில்தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆனால், என் நம்பிக்கை வரையறுக்கப்பட்டிருகின்றது. என் தகுதிக்கும், திறமைக்கும் உட்பட்டே, அந்த நம்பிக்கை தன் ராஜ்ஜியத்தை நடத்துகின்றது. தகுதி வளர்ந்தால்தான் எனது நம்பிக்கை வளர்கிறது.
சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்காய் காய்ப்பது போல், சிலரது நம்பிக்கை அவர்களது சக்தியை விட அதிகமாக இருக்கின்றது.
பெரிய மாமரம் சிறிய கனிகளை ஈன்றெடுப்பது போல,எனது சக்தி, எனது நம்பிக்கையைத் தாலாட்டுகின்றது. "இமயமலையின் மீது ஏறிவிடலா" என்று மனிதன் நம்புகிறான்; ஏற முயற்சிக்கிறான். கால்களில் வலுவில்லை. கடைசியில் ஒரு குன்றின் மீது நின்று கொண்டு "இதுதான் இமயம்" என்று சாதிக்கிறான்.
சொல்லித் திருத்த முடியாத வாதங்களை ஏற்றுக் கொண்டு விட்டால் தொல்லை இல்லை என்பதால், மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்கிறார்கள். களிமண்ணால் சிலை செய்ய முயற்சிக்கும் ஒரு சிற்பி, மண்ணாலேயே ஒரு மாளிகை கட்ட முயற்சிக்கிறான். "காகிதக் கப்பலைக் கடலிலே விடுவேன்;அதை ஓட்டியும் காட்டுவேன்; கரையிலும் சேர்ப்பேன்" என்பது ஒருவனது வாதம்.
இரண்டு காலடிகள் ஒழுங்காக விழுந்து விட்டதாலேயே, கால்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வழுக்குப் பாதைகளில் ஏறுவேன் என்பது இன்னொருவரின் வாதம். ஒரு வெற்றி, பல வெற்றிகளைக் கனவு காண்கின்றது. ஒரு சக்தி, பல சக்திகள் தனக்கிருப்பதாக நம்புகின்றது மத்தளத்தில் புல்லாங்குழல் வாசிக்க ஒரு முயற்சி.
தாரையும், கொம்பும் ஸ்- ரி- க- ம -ப- த- நி பாடுகின்றன. சிலகாலம் அவைகளையும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் நம்பிக்கை அளவுக்கு மீறியதாக ஆகும் போது, அழிவும் கேலியும் எதிரே நிற்கின்றன. கோழிக்குஞ்சைப் பிடித்து விட்ட தைரியத்தில் ஒருவன் யானையையும்- பிடிக்க தயாராகிறான். கேரம்போர்டில் வெற்றி பெற்றுவிட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு ஒருவன் தயாராகிறான். போலந்தையும்,செக்கோஸ்லாவாக்¢யாவையும் பிடித்த மயக்கத்தில் சோவியத் யூனியனுக்குள் நுழைந்த ஹிட்லரைப் போல். நீச்சல் குளத்தில் நீந்தப் பழகியவன், "கடலிலும் குதித்துக் கரையேறுவேன்" என்கிறான்.
நம்பிக்கை தரும் வெற்றிகளை விட தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர் விடும் போது அச்சம் அற்றுப் போகின்றது. அச்சம் அற்றுப்போன இடத்தில், "எது செய்தாலும் சரியே" என்ற துணிவு வருகின்றது. அந்தத் துணிவு, தோல்வியைக் கூட்டி விடுகிறது. தோல்வி நம்பிக்கையை சாக அடிக்கிறது. மனித மனம், பழைய நிலைக்குத் திரும்புகின்றது. மனிதனது கடைசி நம்பிக்கை, மயானம். இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை.
பாஞ்சாலியைத் துகிலுரிந்த போது கெளரவர்களுக்கிருந்த நம்பிக்கை பாரதப்போர் வரையிலும்தான் இருந்தது. எதிரியின் சக்தி என்ன என்று தெரியும்வரை, ஒருவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை யார் தடுக்க முடியும்?
சமுதாயம் சிலரது நம்பிக்கைகளை வியப்போடும், திகைப்போடும் பார்க்கிறது. நான் யாருடைய நம்பிக்கையையும் வேடிக்கையாகப் பார்க்கிறேன். மரணத்தின் பின் மனித ஏடுகள் பரிசீலிக்கப் படும்போது, எது சரி, எது தவறு என்பது தெரியப் போகிறது. அதுவரை சர்க்கஸ்காரனுக்கு அடங்கும் புலியைப்போல், என் நம்பிக்கையை என் அளவுக்குள் வைத்திருக்க விரும்புகிறேன்.

நன்றி : கவிஞர் கண்ணதாசனின் "எண்ணங்கள் ஆயிரம்" எனும் தொகுப்பிலிருந்து..

///சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்காய் காய்ப்பது போல், சிலரது நம்பிக்கை அவர்களது சக்தியை விட அதிகமாக இருக்கின்றது./// நல்ல எடுத்துக்காடு...
ReplyDelete////நம்பிக்கை தரும் வெற்றிகளை விட தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். // உண்மை தான் அருமையான கருத்து...
ReplyDeleteநம்பிக்கை பற்றிய படித்துச் சுவைத்த அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோ.
ReplyDelete