‎ ‎ தகவல் துளிகள்: நமது ஆரோக்கியத்தைக் கவனிக்கும் ஆடைகள்

Saturday, May 28, 2011

நமது ஆரோக்கியத்தைக் கவனிக்கும் ஆடைகள்

ஐரோப்பிய தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஆடைகளை வடிவமைக்கத் துவங்கி இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் இவை சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அலங்கார ஆடைகளோ அல்லது ஆடம்பர ஆடைகளோ அல்ல. இவை மின்னணு சென்சார்கள் கொண்ட ஆடைகள்.



இவற்றை அணிபவர்களின் ஆரோக்கியத்தை இந்த மின்னணு சென்சார் ஆடைகள் தொடர்ந்து கண்காணிக்கும் என்பது தான் இவற்றின் சிறப்பு.


சென்சர்கள்;

உணர்திறன் ஆடைகள் எனப்படும் இந்த `இன்டலிஜெண்ட் டெக்ஸ்டைல்ஸ்', பல எம்பிடட் சென்சார்களைக் கொண்டிருக்கும். இவற்றின் துணையுடன் உடலில் நடக்கும் நீரோட்டத்தை, அதாவது ரத்தம், வியர்வை ஓட்டத்தின் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, உடல் ஆரோக்கியத்தை கணிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மருத்துவமனை நோயாளிகளில் குறிப்பாக கோமா நிலையில் இருப்பவர்கள், மனநலம் குன்றியவர்களின் உள்ளார்ந்த மாற்றங்களைக் கவனிக்க இந்த நவீன ஆடைகள் மிகவும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மனதின் எண்ணங்களுக்கு ஏற்ப உடல் ரத்த ஓட்டம் மாறுபடுவதால், குற்றவாளிகளின் எண்ணங்களை ஆராய குற்றவியல் காவல்துறையினருக்கும் இந்த உணர்திறன் ஆடைகள் மிகுந்த பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

பயோடெக்ஸ்;

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் எட்டு பயிலக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த பயோடெக்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். இவர்கள் வடிவமைத்து இருக்கும் ப்ரோட்டோடைப் மல்டி-சென்சார் டெஸ்ட் பேட்ச், பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

13 comments:

  1. நன்றி மகாதேவன் நல்ல பதிவு... எங்களை கருத்தில் கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி பிரபு


    கருத்துக்கு நன்றி ஏ.எல்.ஏ.முஹம்மத்

    ReplyDelete
  3. @ Seelan said...
    நன்றி மகாதேவன் நல்ல பதிவு... எங்களை கருத்தில் கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

    வாங்க சீலன் அன்பான கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. நவீன ஆடைகள் பற்றிய அறிமுகப் பதிவிற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  5. @ நிரூபன் said...


    கருத்துக்கு நன்றி சகோதரன்.

    ReplyDelete
  6. @ முனைவர்.இரா.குணசீலன் said...//


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  7. நல்ல டெக்னாலஜி தான்...

    ReplyDelete
  8. @அப்பாவி தங்கமணி said...

    கருத்துக்கு நன்றி சகோதரன்.

    ReplyDelete
  9. http://blogintamil.blogspot.com/2011/06/4.html
    தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  10. மிக்க நன்றி சகோதரி தங்களின் அன்பான, நியாமான எண்ணத்துக்கு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...