சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்

1. சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்
2. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்ற வருகுது”என்று பாடியவர் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.
3. அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் ---பரிபாடல்
4. அகநானூற்றில் 1,3 என ஒற்றைப் படை எண்களாக வருவது பாலைத் திணையைச் சார்ந்தவை.

5. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு
6. ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டிப் பாடியவர் ----  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
7. திருக்குறளின் அறத்துப்பால்ää பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் --- வீரமாமுனிவர்
8. பாவேந்தருக்கு  சாகித்ய அகாதெமிப் பரிசைப் பெற்றுத்தந்த நூல் பிசிராந்தையார் நாடகம்
9. சொற்றொடர் நிலை என்று வழங்கப்படுவது -  அந்தாதி
10. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் --- நந்திக் கலம்பகம்
11. உவமைக் கவிஞர் என்று பாராட்டப்பட்டவர் --- சுரதா
12. பாஞ்சாலி கடதத்தில் உள்ள சருக்கத்தின் எண்ணிக்கை - ஐந்து
13. சுந்தரர் தேவாரம் --- ஏழாம் திருமறை
14. கடிகை முத்து புலவரின் மாணவர் --- உமறுப்புலவர்
15. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ---- காதை
16. நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் - தாராபாரதி
17. வரதநஞ்சையப் பிள்ளை இயற்றிய குறவஞ்சி---தமிழரசி குறவஞ்சி
18. உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைத்தண்டனையைப் பெற்றவர்  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.
19. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை ---13 அடி முதல் 31 அடி வரை
20. பொருட்பாலின் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -எழுபது
21. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் தேம்பாவணி எனப்படும் நூல்
22. ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் -- இளங்கோவடிகள்.
23. ‘ஸ்ரீ” சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம் என்று பாரதியாரால் அறிமுகப்பட்டவர் --- பாரதிதாசன்
24. சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறிப்பட்டியலிடும் நூல் சதுரகராதி
25. உலாவிற்குரிய பாவகை ---  கலிவெண்பா
26. பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் -  வாணிதாசன்
27. சிலப்பதிகார உரையாசிரிகளுள் ஒன்று அரும்பதவுரைக்காரர்
28. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்ற முதற்பாவலர்--  சுரதா
29. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு தொண்ணூற்றாறு
30. சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் --- அனுமன்
31. திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் -- பெரிய வச்சான் பிள்ளை
32. உள்ளுறை உவமத்தின் உவமிக்கப்படும் கருப்பொருள் இதுவாக அமையக் கூடாது. --- தெய்வம்
33. ஒன்றே யென்னின் - உன்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் -- யுத்த காண்டம்.
34. புறநானூற்றால் குறிப்பிடப்பட்ட துறைகள் --  65
35. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை -180
36. கபிலரை ‘வாய்மொழிப் கபிலர்” என்று போற்றியவர் ---  நக்கீரர்
37. திருக்குறளின் பெருமை உணர்த்துவது --  திருவள்ளுவமாலை.
38. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் மூன்று
39. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் அஞ்சாதவன்
40. வடமொழியில் பாரதம் பாடியவர் -----வியாசர்
41. ‘பிரபந்தம்” என்னம் வடசொல் உணர்த்தும் பொருள்--- நன்கு கட்டப்பட்டது.
42. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் -- பாரதிதாசன்
43. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்று கவிஞர் அப்துல் ரகுமான்.
44. ‘கிறிஸ்துவ கம்பர்” என்றழைக்கப்படுபவர் --- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
45. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்துச் சிறப்பித்த விருது -பத்மபூஷண்
46. நற்றிணையைத் தொகுப்பித்தவர்  -- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
47. ‘தனயை” என்ற சொல்லின் பொருள் ---- மகள்
48. தைரியநாத சுவாமி என்று அழைக்கப்படுவர் ---  வீரமாமுனிவர்
49. திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை --- ஒன்பது
50. இராமன் கொடுத்தாகச் சீதையிடம் அனுமன் காட்டியது --- கணையாழி
51. தாம் இயற்றிய இராம கதைக்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.
52. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி
53. ‘புலன்” என்னம் இலக்கிய வகை --- பள்ளு
54. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை  --  சிந்துப்பா
55. பாரதிதாசனின் இயற்பெயர் -- சுப்புரத்தினம்
56. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர் -- சுரதா
57. ‘சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர் -- பனு  அகமது மரைக்காயர்
58. தமிழரசு குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் --  முருகன்
59. இராமலிங்கனார்  எக்கலையில் வல்லவர் --- ஓவியக்கலை மற்றும் முத்தமிழிலும் வல்லவர்.
60. ‘அஞ்சிலோதி” இதன் இலக்கணக் குறிப்பு -   அன்மொழித் தொகை
61. “பராய்க்கடன்” என்றால் ---  வேண்டிக் கொள்ளுதல்
62. திருக்குறள் என்பதில் குறள் என்பது --  ஆகுபெயர்
63. பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் கூறுவது ---  நிலம்.
64. சிலப்பதிகாரம் பொருள் எழுதுக--- சிலம்பால் அதிகரித்த வரலாறு
65. ஊர் சூழ்வரி என்பதில் வரி என்பது -- இசைப்பாடல்
66. ‘மருகி” என்பதன் பொருள் ---- மருமகள்
67. தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது --- மூன்று
68. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் --- குயில்
69. ‘திவ்விய கவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் --- பிள்ளைப் பெருமாய் ஐயங்கார்.
70. தமிழகத்தின் ‘வோர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப்பட்டவர் -- வாணிதாசன்
71. ‘தம்பிரான் தோழர்” என்று அழைக்கப்பட்டவர் -- சுந்தரர்
72. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் -- முருகன்.
73. புறநானூற்றின் திணைகள் பதினொன்று
74. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று --  பரிபாடல்
75. “சுந்தரன்” என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் --  அனுமன்
76. வீரமாமுனிவரின் தாய்நாடு --- இத்தாலி
77. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் -- பாரதியார்
78. கவிஞர் ஏறுää பாவலர் மணி முதலிய பட்டங்களைப் பெற்றவர் --- வாணிதாசன்
79. புறநானூறுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பெருந்தேவனார்.
80. கவிச்சக்கரவர்த்தி கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் ஒட்டக்கூத்தர்
81. திவ்விய பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்- பெரிய வாச்சான்பிள்ளை.
82. கற்றோரால் ‘புலவரேறு” என்று சிறப்பிக்கப்பட்டவர்  வரதநஞ்சையப்பிள்ளை
83. நான்கடிச் சிறுமையும்,எட்டிப் பெருமையும் உடைய ஆசிரியப் பாக்களால் அகிய நூல் குறுந்தொகை.
84. ‘தொன்னூல் விளக்கம்” என்னம் நூலை இயற்றியவர் வீரமாமுனிவர்
85. ‘கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்கா கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்” எனப் படியவர் பாரதிதாசன்.
86. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் ‘செவாலியர் விருதினைப் பெற்றவர் வாணிதாசன்
87. ‘இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை என்ற பாடியவர் சுரதா.
88. பாஞ்சாலி சபதத்தில் அமைந்துள்ள சருக்கங்கள் ஐந்து
89. ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு உரை வழங்கியவர் பெரிய வச்சான் பிள்ளை
90. ‘பில்கிரிம்ஸ் பிராகரஸ்” என்னம் ஆங்கில நூலை எழுதியவர்  ஜான் பனியன்.
91. கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் பயின்றவர் உமறுப்புலவர்
92. கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்
93. தமிழரின் வாழ்வியல் சிநதனைகளைக் கருவூலமாக கொண்டு விளங்கும் நூல் புறுநானூறு
94. வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” எனப் பாடியவர் பாரதிதாசன்;.
95. வரி என்பது இசைப்பாடல் வகையது.
96. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் ஒரு திங்கள்.
97. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பகம்
98. உத்தர காண்டத்தைப் பாடியவர்  ஒட்டக்கூத்தர்.
99. கொண்டாடப் பெறும் திருவள்ளுவராண்டின்படி திருவள்ளுவர் காலம் கி.மு. 31.
100. ‘பாரதி” என்னும் சொல்லின் பொருள் கலைமகள்
101. ‘இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதை தொகுப்பு நூலின் ஆசிரியர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்.
102. உமறுப்புலவர் எழுதிய நூல் முதுமொழிமாலை
103. இரட்சண்ய யாத்திரிகத்துள் இடையிடையே அமைந்த இசைப்பாடல்களின் பெயர் தேவாரம்.
104. ‘நமக்குத்; தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்று பாடியவர் பாரதியார்
105. ‘தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளிப்பட்டுள்ளவர் வாணிதாசன்
106. தக்கயாகப்பரணி எழுதியவர் ஒட்டக்கூத்தர்
107. ‘சாகித்ய அகாதெமி” பரிசு பெற்ற ‘பிசிராந்தையார் நாடக ஆசிரியர் பாரதிதாசன்
108. உத்தரவேதம் எனப் பெயர் பெற்றது திருக்குறள்
109. அறத்துப்பாலில் உள்ள குறள்களின் எண்ணிக்கை 380.
110. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஓருவர் ஓட்டக்கூத்தர்
111. அகநானூறு மணிமிடை பளவத்தில் உள்ள பாடல்;களின் எண்ணிக்கை 180
112. நற்றிணையை தொகுப்பித்தவன் பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
113. சிலப்பதிகாரத்தின் உட்பரிவு   காதை
114. தேம்பாவணி நூலின் பாட்டுடைத்தலைவன் சு10சை மாமுனிவர்
115. திவ்வியகவி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
116. பிரபந்தம் என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் நன்கு கட்டப்பட்டது
117. வடமொழியில் பாரதம் பாடியவர் வியாசர்
118. தமிழி பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர் அப்துல்ரகுமான்