பேச்சுக்கலை

பேச்சுக்கலை:
நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.

மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:
மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.

பேச்சும் மேடைப்பேச்சும்:
பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.
பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும்.

பேச்சுக்கலையில் மொழியும் முறையும்:
மேடைப்பேச்சுக்கு கருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
கருத்தைக் விளக்க மொழி கருவியாக உள்ளது.

முக்கூறுகள்:
பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்திக் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துக் பேசுவதையே பேச்சுமுறை என்கிறோம்.
இதனை எடுத்தல், தொடுதல், முடிதல் எனவும் கூறலாம்.

எடுத்தல்:
பேச்சை தொடங்குவது எடுப்பு.
தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.

தொடுத்தல்:
தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல் எனப்படும்.
இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே தொடுத்தல் எனப்படும்.

பேச்சின் அணிகலன்:
எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகு படுத்துவதே அணி எனப்படும்.
கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமையப் பேசுவதே சிறந்த பேச்சாகும்.

உணர்த்தும் திறன்:
உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின் உள்ளத்தில் தாம் விரும்பும் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.

முடித்தல்:
பேச்சை முடி
க்கும்போது தான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனதில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும்.
பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடிதல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.