‎ ‎ தகவல் துளிகள்

Monday, December 26, 2011

தமிழின் வல்லமை(சக்தி)-Power of Tamil






















தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும்  பெருமை கொள்ளவேண்டும். 

Saturday, November 26, 2011

நினைவூட்டும் மோதிரம்

இன்றைய வேகமான உலகத்தில் மனிதனுடைய  அன்றாட  வாழ்க்கையும் அவிசரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.இந்நேரத்தில்  எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்வது என்பது கொஞ்சம் கஸ்ரம்தான்! நமது திருமண நாள்,(கணவன் & மனைவி) பிள்ளகைளின் பிறந்த நாள்கள் போன்ற முக்கியமான நாட்களைக்   கூட மறந்துவிட்டு, ஐயோ" மறந்து போய்ச்சே! என்று புலம்புவோர் நம்மில் பலருண்டு.


இவர்களுக்கு உதவுவதற்காகத்தான் வந்துள்ளது, இந்த  'நினைவூட்டும் மோதிரம்'. இந்த மோதிரத்தின் உள்ளே உள்ள அமைப்பில், ஆண்டில் ஒரு முக்கிய நாளை நாம் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட முக்கிய தினத்துக்கு முந்தைய நாள், இந்த 'நினைவூட்டும் மோதிரத்தின்' ஒரு பகுதி 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்குச் சூடாகி, 10 நொடிகள் நமது மோதிர விரலைச் சுடுமாம். தொடர்ந்து அந்த நாள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 'சுட்டு'க் கொண்டே இருக்குமாம்.

இதற்க்கு மேல் ஞாபகம் வராமல் போகுமா என்ன? 



*என்னை மீண்டும் பதிவெழுத அழைத்த வலைச்சரம் அன்பு பலேபிரபு க்கு மிக்க நன்றிகள்.

Friday, June 17, 2011

கணனியில் சேமித்த கோப்புகளை விரைவாக கண்டுபிடிக்க.


தினம் தினம் நமது அன்றாட கணனிப் பயன்பாட்டின் போது படங்கள்,  வீடியோக்கள், மென்பொருள்கள் என பல வகையான கோப்புகளை நிறையவே சேமித்து வைப்போம். அவற்றில் ஒன்றை திடீரென்று அவிசரமாக கண்டுபிடிக்கப்போனால் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து நமது நேரத்தைத்தான் வீணடிப்போம்.

இதைக் கொஞ்சம் இலகுவாக்குவதற்கு விண்டோவில் உள்ள கோப்புகள் தேடும் பகுதியில் சென்று தேடுவோம் அனால் இதைவிட வேகமாக தேடுவதற்க்கு Search Everything எனும் மென்பொருள் நமக்கு உதவுகிறது. இனிமேல் எந்தப் பைலை எங்கு வைத்தோம் என்று கவலைப்படத் தேவையில்லை.

அனைத்து வகையான விண்டோவிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வெறும் 333KB கொள்ளவு கொண்ட இந்த சிறிய  மென்பொருளை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் தேட விரும்புவதின் பெயரைக் 
கொடுத்து என்டர் தட்டவும் அவ்வளவுதான்.

Tuesday, June 7, 2011

பொறுமையிருந்தால் வெற்றி பெறலாம்-வீதியில் கிடந்த தமிழ் காகிதம்.

நேற்று நான் வீதியால் சென்றபோது என் காலடியில் தமிழ் காகிதமொன்று அழுக்கோடு கிடக்கக் கண்டேன் அட அந்நிய அரபு தேசத்து வீதியில் தமிழ் காகிதமா? என்று ஆவலோடு எடுத்து வாசித்துப்பார்த்த  போதுதான்  அதன் அருமையான அறிவுரை என் உள்ளத்தை தொட்டது எல்லோரும் அறியவேண்டும் என்பதற்க்காக உடனே தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன் நீங்களும் கொஞ்சம் படித்துப்பாருங்கள் உறவுகளே!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...