பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

  1. இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
  2. பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா.
  3. வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
  4. அங்கு ஆணையடிப் பள்ளியில் படித்தார். வருமையின் காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை.
  5. நாடகங்களில் நடித்து, திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார்.
  6. அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் இவரை மிகவும் கவர்ந்தது.
  7. நடிப்பையும், அரசியலையும் தம் இரு கண்களாக கருதினார்.
  8. மக்கள் அவரை, “புரட்சி நடிகர்” என்றும், “மக்கள் திலகம்” என்றும் போற்றினர்.
  9. அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா, “இதயக்கனி” என்று போற்றினார்.
  10. இவர் 1963ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
  11. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  12. 1972ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
  13. அவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
  14. 11 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
  15. சென்னை பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
  16. இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
  17. மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு வழங்கும் திட்டம் ஆக மாற்றினார்.
  18. 24.12.1987 ஆன்று இயற்கை எய்தினார்.
  19. 1988ஆம் ஆண்டு இந்திய அரசு அவரின் மறைவுக்குப் பின் பாரதரத்னா விருது(இந்திய மாமணி) வழங்கியது.