தமிழ்விடு தூது

சொற்பொருள்:

  1. அரியாசனம் – சிங்காதனம்
  2. பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  3. வரம்பு – வரப்பு
  4. ஏர் – அழகு
  5. நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
  6. நெறிநாலு – வைதருப்பம் (ஆசுகவி), கௌடம்(மதுரகவி), பாஞ்சாலம் (சித்திரகவி), மாகதம் (வித்தாரகவி)
  7. நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
  8. சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
  9. நாளிகேரம் – தென்னை


இலக்கணக்குறிப்பு:

  1. செவியறுத்து  - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  2. பிரித்தறிதல்:
  3. நாற்கரணம் = நான்கு + கரணம்
  4. காரணத்தேர் = கரணத்து + ஏர்
  5. நாற்பொருள் = நான்கு + பொருள்
  6. இளங்கனி = இளமை + கனி
  7. விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு


நூற்குறிப்பு:

  1. தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  2. கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
  3. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.