கோவாவில் 14.06.2014 அன்று நடைபெறும் விழாவில் விக்ரமாதித்யா போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

கோவாவில் 14.06.2014 அன்று நடைபெறும் விழாவில் விக்ரமாதித்யா போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் கப்பலில் பயணம் செய்து சாகச நிகழ்ச்சிகளை பார்க்கிறார் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதற்கான விழா கோவாவில் நடைபெறுகிறது.ரஷியாவிடமிருந்து...ரஷிய நாட்டு கடற்படையில் ‘அட்மிரல் கோர்ஸ்கோவ்’ என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் செயல்பட்டு வந்தது.
இந்த கப்பலை வாங்குவதற்கு ரஷியாவுடன், கடந்த 2004-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.பல்வேறு மறுசீரமைப்பு பணிகள், அனைத்து கட்ட சோதனைகள், கடல் பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த போர்க்கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ரஷியாவிடம் இருந்து இதை பெற்றுக்கொண்ட அப்போதைய பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி, முறைப்படி இந்திய கடற்படையில் சேர்த்தார். பிரதமர் மோடிரூ.15 ஆயிரம் கோடிக்கு அதிகமான விலையில் வாங்கப்பட்ட இந்த கப்பல், சுமார் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டதாகும். இந்த கப்பலுக்கு ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ என்று இந்தியா பெயரிட்டுள்ளது. இந்த நிலையில் கோவாவில் இன்று நடைபெறும் வண்ணமிகு விழாவில், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மேலும் அவர், கடற்படை வீரர்களின் பயிற்சி மையம் ஒன்றையும் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.சாகச நிகழ்ச்சிபின்னர் அந்த கப்பலில் பயணம் செய்து போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை அவர் பார்வையிடுகிறார். இதில் மிக்-29 கே விமானம் உள்ளிட்ட பல்வேறு கடற்படை விமானங்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன.இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடற்படை சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 26-ந் தேதி பிரதமராக பதவியேற்ற மோடி, டெல்லிக்கு வெளியே நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.