tnpsc study material free download

  • மியூட்ரியாட்டிக் அமிலத்தின் வேதிப்பெயர் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  • வேதிப்பொருட்களின் ராஜா எனப்படுவது - கந்தக அமிலம்(சல்பியூரிக் அமிலம்)
  • நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா ஃபோர்டிஸ்
  • சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்
  • கதிர்வீச்சுக் கழிவுகளை கான்கிரீட் பெட்டகங்களில் வைத்து கடலில் போட வேண்டும்.
  • உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்
  • நீர்கோளத்தில் குடிப்பதற்கு ஏற்ற நீரின் சதவீதம் - 1 சதவீதம்
  • ஆறு, ஏரி மற்றும் பனிமலைகளில் அடங்கியுள்ள நீரின் சதவீதம் - 2.7 சதவீதம்
  • தனக்கென்று ஒரு குறிப்பிட்ட நிறையையும் பருமனையும் பொருள் பெற்றுள்ளது.
  • திண்மம் என்பது - குறிப்பிட்ட பருமனையும் குறிப்பிட்ட வடிவமும் உடையது.
  • குறிப்பிட்ட பருமனும், குறிப்பிட்ட வடிவமற்றதும் திரவம் ஆகும்
  • குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளாததும், வடிவமற்றதும் வாயு ஆகும்
  • மூலக்கூறுக்களுக்கிடையேயான கவர்ச்சி விசை திண்மப் பொருளில் அதிகமாக இருக்கும்
  • மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை மிகவும் புறக்கணிக்கத்தக்கதாக இருப்பது - வாயுப்பொருளில்
  • திடப்பொருளானது சூடேற்றப்படும்போது திரவப்பொருளாக மாறுவது உருகுதல் எனப்படும்.
  • பணிக்கட்டியின் உருகுநிலை - 0 டிகிரி செல்சியஸ்
  • எந்த வெப்பநிலையில் திரவமானது கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதுவே அதிரவத்தின் கொதிநிலை எனப்படும்.
  • நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ்
  • திரவப்பொருளைச் சூடேர்றும்போது அது வாயுவாக மாறுவது ஆவியாதல் எனப்படும்
  • ஒரு திடப்பொருள் நேரடியாக வாயுநிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும்.
  • பதங்கமாதலுக்கு எடுத்துக்காட்டு - கற்பூரம், அயோடின், அம்மோனியம் குளோரைடு
  • ஒரு வாயு திரவமாக மாறுதல் ஆவி சருங்கி நீர்மமாதல்
  • திரவப்பொருள் குளிர்விக்கப்படும்பொழுது திடப்பொருளாக மாறும் நிகழ்ச்சி உறைதல் எனப்படும்.