GENERAL TAMIL 5


  • அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த நூல் -ஒளவையார்
  • அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது - ஒளவையார்
  • அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் -ஒளவையார்
  • உயிரை உணர்வை வளர்ப்பதுதமிழே - பாரதிதாசன்
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது - நற்றிணை
  • எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே - தாயுமானவர்
  • ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது -சிலப்பதிகாரம்
  • கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல்   கவிஞர்
  • கவிஞர்களில் இவர் ஓர் இளவரசர்ஞ என்று வீரமாமுனிவரால் பாராட்டப்பட்டவர் - திருத்தக்க தேவர்
  • கீதையை மொழிபெயர்த்தவர் - பாரதியார்
  • சங்கே முழங்கு -பாரதிதாசன்
  • சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதைத்தொழுது படித்திடடி பாப்பா - பாரதியார்
  • தமிழ் மாதின் இனிய உயர்நிலை - திருக்குறள்
  • தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக்கலம்பகம்
  • தமிழில் தோன்றிய முதல் புதினம் - பிரதாப முதலியார் சரித்திரம்
  • தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்
  • தமிழே நீயோர் பூக்காடு நானோர் தும்பி - பாரதிதாசன்
  • திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழயில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்
  • திருவகுப்பு என்னும் நூலினை முருகன் மீது பாடியவர் – அருணகிரிநாதர்
  • தெருவேல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் - பாரதியார்
  • தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம் - கவிமணி
  • நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதியார்
  • நல்லிசைக் கபிலன்  - பெருங்குன்னூர்க்கிழார்
  • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் - பாரதியார்
  • பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் -ஒட்டக்கூத்தர்
  • புலனழுக்கற்ற அந்தணாளன் (கபிலர்)  - மாறக்கோத்து நப்பசலையார்
  • புறநானூற்றின் சிலப் பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்   - ஜி.யு. போப்
  • பொய்யா நாவிற் கபிலன்  - மாறக்கோத்து நப்பசலையார்
  • மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர். புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என போற்றப்படுபவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்
  • முச்சங்களுக்கும் பொதுவான இலக்கண நூலாகவும். தொல்காப்பியத்திற்கு முதன் நூலாகவும் விளங்குவது - அகத்தியம்.
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் - பாரதியார்
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்
  • வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்
  • வாய்மொழிக் கபிலன் -நக்கீரர்
  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே - பாரதிதாசன்
  • வெறுத்த கேள்வி விளங்க புகழ்க் கபிலன்  - பொருந்தில் இளங்கீரனார்