பேரறிஞர் அண்ணா விருது | அண்ணல் அம்பேத்கர் விருது | பெருந்தலைவர் காமராஜர் விருது

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967- 1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர்.
இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இதுவரை பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்கள்:
*    2006 - ஆர். எம். வீரப்பன்
*    2007 - சாரதா நம்பி ஆரூரான்
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - முனைவர் அவ்வை நடராஜன்
*    2010 - கோ. ரவிக்குமார்
*    2011 - இரா.  செழியன்
*    2012 - கே.ஆர். பி. மணிமொழியான்
*    2013 - பண்ருட்டி ச. இராமச்சந்திரன்

அண்ணல் அம்பேத்கர் விருது

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூக நீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள்:
*    2006 - தொல். திருமாவளவன்
*    2007 - ஆர். நல்லக்கண்ணு
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
*    2010 - யசோதா
*    2011 - சு. காளியப்பன்
*    2012 - தா. பாண்டியன்
*    2013 - பேராயர் எம். பிரகாஷ்


பெருந்தலைவர் காமராஜர் விருது


தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை பெருந்தலைவர் காமராசர் விருதுபெற்றோர்:

*    2006 - திருநாவுக்கரசு
*    2007 - மாரிமுத்து
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - விருதுநகர் இரா. சொக்கர்
*    2010 - ஜெயந்தி நடராசன்
*    2011 - திண்டிவனம் ராமமூர்த்தி
*    2012 - சிங்கார வடிவேல்
*    2013 - கி. அய்யாறு வாண்டையார்