ஆழ்வார்கள்

* தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.
* 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' - பாரதியார்.

* 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' - பாரதிதாசன்.
* தனது கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்' என எழுதவேண்டுமென தனது இறுதிமுறியில் எழுதிவைத்தவர் - ஜி.யு.போப்
* 'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' - பாரதிதாசன்.
* இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.
* நகண்டுகளில் பழமையானது சேந்தன் திவாகரம். இதன் ஆசிரியர் திவாகரர்.
* சூடாமணி நிகண்டு - மண்டலபுருடர்.
* திருமூலரின் திருமந்திரத்தில் 'அகராதி' எனும் சொல் முதன்முதலாக இடம் பெற்றள்ளது.
* தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி - வீரமாமுனிவரின் சதுரகராதி
* 'அபிதான கோசம்' தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும் (1902 ஆண்டு வெளியானது).
* 'பீலி' என்பதன் பொருள் மயில்தோகை.
* 'தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர்.

ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

5. நம்மாழ்வார்

6. மதுரகவியாழ்வார்

7. பெரியாழ்வார்

8. ஆண்டாள்

9. திருமங்கையாழ்வார்

10. தொண்டரடிப்பொடியாழ்வார்

11. தருப்பாணாழ்வார்

12. குலசேகராழ்வார்

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.தொகுத்தவர் நாதமுனி. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் 4 பிரிவுகளை உடையது (முதலாயிரம், மூத்த திருமொழி, திருவாய் மொழி, இயற்பா). திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும். 

திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடியவர் மதுரகவியாழ்வார்.