பொது அறிவு - தமிழ்


1) தேர், குதிரை, யானை, காலாள் என்பன?
1) நால்வகை மிருகங்கள்2) நால் வருணத்தவர்3) நாற்படைகள்4) நாள்வகைப்பா


2) இருகுரவர் யார்?
1) தாய், தந்தை2) தெய்வம், குரு3) தந்தை, தெய்வம்4) தாய் , குரு
3) கொண்டல், கார், முகில் எனப் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) மேகம்2) வானம்3) கண்டம்4) மழை
4) கண்ணிலான் கண் பெற்றிழந்தாற் போல எனும் உவமைத் தொடரின் பொருள்?
1) பறிக்கப்பட்ட இன்பம்2) தருணத்தில் உதவி3) பயனின் அழிவு4) சேர்ந்துஞ் சேராமை
5) ஆசையும் அழிவும் எனும் பொருள் தரும் உவமைத் தொடர்?
1) குன்று முட்டிய குருவி போல2) நாய்க்குத் தவிசு இட்டது போல3) குறிச்சி புக்க மான் போல4) விளக்கில் விழுந்த விட்டில் போல
6) பழக்கத்தின் புளிப்பை விளக்கும் பழமொழி?
1) நிலவுக்கஞ்சிப் பரதேசம் போவதா2) வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச்சாட்டு3) நித்தம் போனால் முற்றஞ் சலிக்கும்4) மதியாதார் வாசல் மிதியாதே
7) தன்மான உணர்ச்சியை புலப்படுத்தும் பழமொழி?
1) தீராக்கோபம் போராய் முடியும்2) புலி பசித்தாலும் புல் தின்னாது3) மெளனங் கலக நாசம்4) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
8) முன்னிலையில் மட்டும் வரக்கூடிய வினை?
1) தெரிநிலை வினை2) தன் வினை3) வியங்கோள் வினை4) ஏவல் வினை
9) மறை, சுருதி, ஆரணம் எனப் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) வில்2) வேதம்3) மேகம்4) அரி