பொது அறிவு தகவல்கள்

•சி.பா ஆதித்தனார் 107வது பிறந்த நாளில் (2011)விருது பெற்றவர்கள் யாவர்?

மூத்த தமிழறிஞர் விருதும் 1 1/2 லட்சம் பணமும் பெற்றவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்.

தமிழ் வாகைச் செம்மல் விருதும் ரூ.1 லட்சம் பணமும் பெற்றவர் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன்.


• இராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உயிரைக் காப்பாற்றக் கோரி காஞ்சிபுரத்தில் தீக்குளித்த இளம் பெண்ணின் பெயர் என்ன? எப்போது?

செங்கொடி என்ற பெண். 28 ஆகஸ்டு, 2011

•அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தாக்கிய புயலின் பெயர் என்ன? எப்போது ஏற்பட்டது?

ஐரீன் என்ற புயல், 28ஆகஸ்டு 2011

•ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் 'ரபோன் மகசேசே' விருதைப் பெற்ற இந்தியர் பெயர் என்ன?

நீலிமாமிஸ்ரா, ஹரீஷ் ஹண்டே உள்பட 6 பேர் பிரிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31 ஆகஸ்ட் 2011ல் பெற்றனர்.

• துப்பாக்கி சுடுதல் போட்டியில் 'கேல் ரத்னா' விருதைப் பெற்ற வீரர் யார்? எப்போது பெற்றார்?

சுகன் நரங்கு, ஜனாதிபதி பிரதீபாபாட்டில் ஆகஸ்டு 28, 2011ல் வழங்கினார்.

•இங்கிலாந்தின் லி செஸ்டரில் உள்ள 'மான்போர்ட் பல்கலைக்கழகம்' மூலம் கவுரவ டாக்டர் பட்டத்தைப் பெற்ற இந்தியன் கிரிட்கெட் கேப்டன் யார்?

டோனி (30ஆகஸ்ட் 2011)

•அமெரிக்காவின் புகழ்பெற்ற 'கிராமி விருது' பெற்ற இசையமைப்பாளர் யார்?

ஒரே நேரத்தில் இரண்டு கிராமி விருதுகளைப் பெறும் முதல் தமிழர் ஏ.ஆர்.ரகுமான் (2010)

• உலகின் உயர்ந்த கட்டடம் எது? எங்கே உருவாக்கப்பட்டது?

'புர்ஜ் துபாய்' 800 மீட்டம் உயரம், 160 மாடிகள், ஓட்டல்கள், ஹாப்பிங் ஹால்கள் (2010 இன் உலக சாதனை)

• உலகின் 108 ஆண்டுகளுக்குப் பின் அரிய சூரிய கிரகணம் நிகழ்ந்தது எப்போது? அதன் பெயர் என்ன?

15 ஜனவரி 2010ல் நிகழ்ந்தது, அதன் பெயர் கங்கண சூரிய கிரகணம்.

• தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி யார்?

லத்திகா சரண்.