பக்தி இலக்கியம்

சிவதாண்டவம் ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு விதமாக நிகழ்ந்துள்ளன:

* படைத்தல் தொழிலை குறிக்கும் 'காளிகா' தாண்டவத்தை சிவபெருமான் ஆடியது திருநெல்வேலி தாமிரசபை.

* காத்தல் தொழிலை குறிக்கும் 'சந்தியா' தாண்டவம் மதுரை வெள்ளியம்பலம்.

* அழித்தல் தொழிலை குறிக்கும் 'சங்கரா' தாண்டவம் அரங்கேறிய இடம் திருப்பத்தூர்


* மறைத்தல் தொழிலை குறிக்கும் 'திரிபுர' தாண்டவம் நிகழ்ந்தது குற்றாலம் சித்திரசபை.

* அருளல் செய்யும்போது ஆடிய 'ஊர்த்துவ' தாண்டவம் நடந்தது திருவாலங்காடு ரத்தினசபை.

* படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை குறிக்கும் 'ஆனந்தத் தாண்டவம்' நடைபெற்றது சிதம்பரம் கனகசபை.

* சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடியது 'உன்மத்த நடனம்'. இது நிகழ்ந்த இடம் திருநள்ளாறு.

* நாகப்பட்டினத்தில் கடல் அலை மாதிரி அசைந்து ஆடிய தாண்டவத்துக்கு 'தரங்க நடனம்' என்று பெயர்.

* கோழி போல் ஆடிய 'குக்குட நடனம்' நிகழ்ந்த தலம் திருக்காறாயில்

* மலரை வண்டு குடைவதுபோல் ஆடிய 'பிருங்க நடனம்' நடந்த இடம் திருக்கோளிலி.

* காற்றில் தாமரை அசைவதுபோல் ஆடிய 'கமல நடனம்' இடம் பெற்ற தலம் திருவாரூர்.

* அன்னம் மாதிரி அடியெடுத்து ஆடிய 'ஹம்சபாத நடனம்' நிகழ்ந்தது வேதாரண்யம்.

சிவபெருமானின் எட்டு வீரச்செயல் நடந்த தலங்கள்:

*திருக்கண்டியூர் - பிரம்மனின் தலை கொய்தல்.

*திருப்பறியல் - தக்கன் தலை கொய்தல்

*திருவதிகை - திரிபுரம் எரித்தது

*திருக்குறுக்கை - காமனை எரித்தது

*திருக்கடவூர் - காலனை உதைத்தது

*திருவிற்குடி - க(ச)லந்தராசுரன் சம்காரம்

*திருவழுவதூர் - கஜாசுரன் சம்காரம்

*திருக்கோவிலூர் - அந்தகாசுரன் வதம்