GENERAL TAMIL 6
- ’ஒன்றேயென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
 
- வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர்   ( வான்மீகி )
 
- கவிப் பேரரசர்     (கம்பர்)
 
- கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர்   (இராமவதாரம்)
 
- கம்பர் பிறந்த ஊர்    (திருவழுந்தூர்)
 
- கம்பர் வாழ்ந்த காலம்    (கி.பி.12)
 
- கம்பரை ஆதரித்த வள்ளல்    (சடையப்ப வள்ளல்)
 
- ‘கவிச்சக்கரவர்த்தி’ எஅனப் போற்றப்படுபவர்   (கம்பர்)
 
- மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
 
- தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர்  (வரதநஞ்சையப் பிள்ளை)
 
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்            (சுவாமிமலை முருகன்) 
 
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)
 
- கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
 
- கற்றோரால் ‘புலவரேறு’ எனச் சிறப்பிக்கப் பட்டவர்    (வரதநஞ்சையப் பிள்ளை)
 
- வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)
 
- வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார்.   (நமசிவாய முதலியார்)
 
- யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
 
- நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல்             (நாமக்கல் கவிஞர் பாடல்கள்) 
 
- நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
 
- நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
 
- நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர்  (ஓவியக்கலை)
 
- ‘கத்தியின்றி இரத்தமின்ம்றி’ என்னும் பாடலை இயற்றியவர்  (நாமக்கல் கவிஞர்)  
 
- நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது  (பத்மபூஷன்)
 
- நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு         (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)  
 
- முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
 
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
 
- எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)    
 
- அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
 
- சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)
 
- சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி -----------        (உள்ளுறை உவமம், இறைச்சி)   
 
- உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம்.   (குறிப்புப் பொருள் உத்தி)
 
- புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர்   (புறம், புறப்பாட்டு)
 
- புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு)
 
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்        (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 
 
- புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள்    (11)
 
- புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள்    (65) 
 
- தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்     (புறநானூறு)
 
- புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  (ஜி.யு.போப்) 
 
- அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை   (13 – 31)
 
- அகநானூற்றைத் தொகுத்தவர்    (உருத்திரசன்மர்)
 
- அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
 
- அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர்    (நெடுந்தொகை)
 
- ‘அகம்’ என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு) 
 
- அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை  (மூன்று)
 
- அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள்    (120)
 
- அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
 
- அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
 
- அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ---------- திணைப் பாடல்கள்  (பாலை)
 
- அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
 
- அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
 
- அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
 
- அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள்      (நெய்தல்)
 
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
 
- நற்றிணைப் பாக்களின் அடிவரையறை    (9 – 12) 
 
- நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்          (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 
 
- நற்றிணையைத் தொகுப்பித்தவன்   (பன்னாடு தந்த மாறன்வழுதி)
 
- குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை  (4-8)
 
- குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்     (பாரதம் பாடிய பெருந்தேவனார்)  
 
- குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை  (402)
 
- கபிலர் பிறந்த ஊர்    (திருவாதவூர்)
 
- கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
 
- கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
 
- கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
 
- கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர்  (பாரி)
 
- கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர்    (நக்கீரர்)
 
- கபிலரை ‘நல்லிசைக் கபிலர்’ எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
 
- கபிலரை ’வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனப் பாராட்டியவர்   (பொருந்தில் இளங்கீரனார்)
 
- கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ எனப் பாராட்டியவர்  (மாறோக்கத்து நப்பசலையார்)  
 
- ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)
 
- ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை  (100)
 
- ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை   (500)
 
- ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர்  (கபிலர்)
 
- ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர்  (பேயனார்)
 
- ஐங்குறுநூறு மருதத் திணையைப் பாடியவர்   (ஓரம்போகியார்)
 
- ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
 
- ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
 
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர்                (பாரதம் பாடிய பெருந்தேவனார்)  
 
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)
 
- ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன்                         (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை) 
 
- திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)
 
- குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
 
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)
 
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)
 
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்    (25)
 
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள்   (9)
 
- திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள்  (4)
 
- திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள்  (3)
 
- திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)
 
- ’பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது?   (திருக்குறள்)
 
- திருக்குறளின் பெருமையை உணர்த்துவது  (திருவள்ளுவமாலை)
 
- ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாடியவர்  (பாரதியார்)
 
- வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர்  (பாரதிதாசன்)
 
- திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை  (பத்து)
 
- திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது.    (பரிமேலழகர்)
 
- முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர்         (திருக்குறள்)
 
- கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
 
- ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது    (சிலப்பதிகாரம்)
 
- முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல்   (சிலப்பதிகாரம்)
 
- சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
 
- சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு  (காதை)
 
- சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை  (30)
 
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர்  (இளங்கோவடிகள்)
 
- இளங்கோவடிகளின் தந்தை  ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
 
- இளங்கோவடிகளின் தாயார் பெயர்  (நற்சோனை)
 
- இளங்கோவடிகளின் தமையன் பெயர்  (சேரன்செங்குட்டுவன்)
 
- சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)
 
- சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர்    (அரும்பத உரைகாரர்)
 
- சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர்   (அடியார்க்குநல்லார்) 
 
-  சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை  (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)
 
- சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர்   (இரட்டைக் காப்பியங்கள்)
 
- மணிமேகலையை இயற்றியவர்   (சீத்தலைச் சாத்தனார்)
 
- யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்?   (சீத்தலைச் சாத்தனார்)
 
- ’நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர்  (பாரதியார்)
 
- ”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர்    (கவிமணி)
 
- வரி என்பது ------------------ வகையது.  (இசைப்பாடல்)
 
- கண்ணகியின் தந்தை பெயர்   (மாசாத்துவான்)
 
- கோவலனின் தந்தை பெயர்  (மாநாய்கன்)
 
- மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)
 
- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)